வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? Online

Rate this post

Legal Heir Certificate Apply Online in Tamil (ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?) Documents, Validity Period.

Overview

After an individual’s death, the individual’s possessions and assets are inherited by their legal heir(s). A legal heir certificate is a very important document to establish the relationship between the deceased person and the legal heir(s). Usually, a surviving family member has to approach the Corporation office or Taluka office to obtain such a Nativity certificate. You can apply online for legal heir certificate or tax lien certificate in Tamil Nadu.

A Succession Certificate issued by the District Collector’s Office to claim the property or pecuniary benefits of the head of a family upon his death. Succession certificate is very important for the smooth distribution of the assets after the death of a person.

Here we will know how to get this succession certificate online at www.tnesevai.tn.gov.in.

  • இந்த வாரிசு சான்றிதழ் ஆன்லைனில் பெறுவதற்கு முதலில் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.
  • அதற்கு www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அவற்றில் Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Step1: TN-esevai Registration

இப்பொழுது மேலே காட்டப்பட்டுள்ளது போல் ஒரு திரை திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.

பின்பு sing up என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய கைபேசி எண்ணுக்கு ஒரு otp  எண் அனுப்பப்படும் அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தல் உங்களுக்கு Registration ஆகிவிடும்.

Step2: User Login

இப்பொழுது Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள் அவற்றுள் user name, password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.

பின்பு Login என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது எங்களுடைய ID லாகின் ஆகிவிடும்.

Step3: வாரிசு சான்றிதழ் பெற தேவைப்படும் ஆவணங்கள்

தமிழ்நாட்டில் ரெவ்-114 (REV-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழுக்காக  விண்ணப்பிக்கும் போது ஒருவருக்குத் தேவைப்படும் ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஒரு புகைப்படம்
  • அடையாளச் சான்று ஆவணம்  (ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டை)
  • முகவரிச் சான்று ஆவணம் (செல்லத்தக்க அடையாளச் சான்று ஆவணங்கள், தொலைபேசி/மொபைல் கட்டண சீட்டு, சமையல் எரிவாயு கட்டண சீட்டு  , சட்டப்பூர்வ வாரிசின் பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய வங்கிக்கணக்குப் புத்தகம் )
  • இறந்தவரின் இறப்பு சான்றிதழ்
  • சட்டப்பூர்வ வாரிசு(கள்) பிறந்த தேதி சான்று  (பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பள்ளி மாற்றம்/விட்டு விலகிய  சான்றிதழ், பாஸ்போர்ட்)
  • சுய அறிவிப்பு வடிவம்

Step4: CAN Number Register

பின்பு Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு அவற்றை revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக் செய்தவுடன் revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list out காட்டப்படும். அவற்றில் இரண்டாவது பேஜியில் legal heir certificate என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது ஒரு விண்டோ திறக்கப்படும் processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது can நம்பர் பதிவு பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு legal heir certificate அப்ளை செய்வதறக்கு மேலே காட்டப்பட்டுள்ளது போல் ஒரு FORM திறக்கப்படும் அவற்றில் தங்களுடைய விவரங்களை தெளிவாக உள்ளிடவும்.

பின்பு கீழே make payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து pay செய்து கொள்ளலாம். அவ்வளவுதான் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்து விட்டோம்.

வாரிசு சான்றிதழ் (vaarisu certificate in tamil) online apply செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா. சரி தங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி வணக்கம்.

Step5: கட்டணம்

வாரிசு சான்றிதழ் பெற INR 60 செலவாகும்.

Leave a Comment