Pongal Rangoli Kolam Designs 2024 பியூட்டிஃபுல் ரங்கோலி

Rate this post

Pongal Rangoli Kolam Designs பியூட்டிஃபுல் ரங்கோலி கோலம் போடுவது நாம் பூமிக்கு செய்யும் மரியாதை. கூடுதலாக அரிசி மாவினால் இடும் கோலம் வாயில்லா ஜூவராசிகளுக்கு உணவாகவும் இருக்கிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பொதுவாக, தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்தது. அந்தவகையில் அனைத்து பிரபஞ்ச செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் மக்களால் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பாரம்பரியமாகவே தமிழகத்தில் எந்த ஒரு பண்டிகை என்றாலும், வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது வழக்கம். குறிப்பாக தென் மாவட்டங்களில் பொங்கல் முந்தைய நாள் இரவு, பெண்கள் இரவு முழுவதும் விழித்து வீட்டு, வாசல்களில் விதவிதமாக கோலம் வரைவார்கள்,

கோலம் போடுவது நாம் பூமிக்கு செய்யும் மரியாதை. கோலம், வீட்டிற்கு லஷ்மி கடாட்சத்தை அளிக்கும். மேலும், மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். கூடுதலாக அரிசி மாவினால் இடும் கோலம் வாயில்லா ஜூவராசிகளுக்கு உணவாகவும் இருக்கிறது. கோலத்தின் நடுவில் சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது மகாலட்சுமி மனம் மகிழ்ந்து நம் வீட்டுக்குள் வருவாள் என்பது ஐதீகம்

இந்த பொங்கல் நாளின் உங்கள் வீட்டுக்கு மேலும் லட்சுமி கடாட்சம் கொண்டு வர அழகான ரங்கோலி கோலங்கள் இங்கே உள்ளது.

Leave a Comment