SBI Internet Banking Password Reset செய்வது எப்படி?

5/5 - (4 votes)

SBI Internet Banking Password Reset செய்வது எப்படி? ATM Card Details, Profile Password, Branch Activation மூலம் reset செய்யலாம்.

SBI வங்கி  கிளையானது நிறைய சேவைகளை online மூலம் வழங்கி வருகிறது அதில் ஒரு சேவையே இன்று பார்ப்போம் “SBI Internet Banking Password Reset ” இந்த Net-Banking மூலம் வங்கிக்கணக்கு  சம்மந்தப்பட்ட பல்வேறு சேவைகளை வங்கிக்கு போகாமல் Online வழியே பெறலாம். அதாவது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள், ATM கார்டுக்கு விண்ணப்பித்தல், ATM கார்டு பின் நம்பரை உருவாக்குதல், மொபைல் எண்ணை மாற்றுதல் இதுபோன்ற இன்னும் பல வேலைகளை ஆன்லைனில் செய்யலாம்.

இந்த Net-Banking account -யை Open செய்ய Username மற்றும் Password, A/c No, CIF, Branch தேவைப்படும். நீங்கள் நீண்ட நாட்களாக இந்த சேவையை பயன்படுத்தாமல் இருக்கலாம் அல்லது நீங்கள் அமைத்த Password/ ஆனது நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல்  மிகவும் கடினமானதாக இருக்கலாம். இந்த காரணங்களால் நீங்கள்  Password-யை மறந்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது .

SBI Internet Banking Password Reset Online

You can reset your SBI Internet Banking Password using the following steps and instructions

Step 1: முதலில் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள சேவை பக்கமான https://retail.onlinesbi.com பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: இப்பொழுது SBI-ன் Internet Banking Login பக்கம் இருப்பதை காணலாம். அதில் Forgot Username / Login Password என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: அடுத்து ஒரு Popup Window தோன்றும். அதில் ஏற்கனவே Forgot My Login Password என்பது தேர்வாகி இருக்கும். இப்பொழுது அதற்கு கீழே உள்ள Next என்பதை கிளிக் செய்யவும்.

Step 4: இந்த பக்கத்தில் உங்களின் Net-banking-ன் Username, Account Number, Mobile Number, Date of Birth போன்ற தகவல்களை சரியாக கொடுக்க வேண்டும்.

பிறகு அதற்கு கீழே உள்ள Captcha Code-யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.

Step 5: இப்பொழுது நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள Mobile எண்ணிற்கு ஒரு OTP Number வரும். அந்த Number-யை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.

இந்த பக்கத்தில் Using ATM Card Details, Using Profile Password, Reset Your Login Password with Branch activation என்ற 3 விதமான Options இருக்கும். இதில் ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்து நீங்கள் புதிய Password-யை Set செய்யலாம்.

1. Reset SBI Login Password by Using ATM Card Details 

Step 1: நீங்கள் முதலாவதாக உள்ள Using ATM Card Details என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Step 2: இதில் உங்கள் ATM Card யை தேர்வு செய்து Confirm என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: தற்போது Debit Card Validation என்ற பக்கம் திறக்கும். அதில் உங்களின் ATM Card இல் உள்ள Expiry Date, Card Holder Name, மற்றும் ATM PIN Number ஆகியவற்றை Enter செய்து Proceed என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4: அடுத்து வரும் பக்கத்தில் Enter New Login password என்ற இடத்தில்  உங்கள் புதிய password-யை நீங்கள் Type  செய்ய வேண்டும். பிறகு அதற்க்கு கீழ் உள்ள Conform New Login Password என்ற இடத்தில் அதே Password-யை மீண்டும் Type செய்ய வேண்டும்.

பிறகு கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும்.

Step 5: இப்பொழுது உங்களுக்கு Your Login Password has been reset successfully என்ற செய்தி வரும்.

2. Reset SBI Login Password by Using Profile Password

Step 1: இரண்டாவதாக உள்ள Using Profile Password என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Step 2: இப்பொழுது உங்களின் Profile Password-யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: அடுத்த பக்கத்தில் உங்களின் New Password-யை Set செய்யலாம்.

3. Reset Your Login Password with Branch activation

Step 1: மூன்றாவதாக உள்ள Reset Your Login Password with Branch Activation என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Step 2: இப்பொழுது உங்களுக்கு ஒரு Reference Number வரும். மேலும் அதில் உள்ள Click Here என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு Form Download ஆகும்.

Step 3: அந்த Form-யை Print எடுத்துக்கொண்டு அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி வங்கியில் சென்று கொடுக்க வேண்டும்.

Step 4: பிறகு வங்கித்தரப்பில் இருந்து உங்களுக்கு ஒரு மூடப்பட்ட போஸ்ட் கவரை கொடுப்பார்கள். அதில் உங்களின் Login Password இருக்கும்.

எப்போதெல்லாம் Password-யை Reset செய்ய வேண்டும்

  • தற்போது இணைய தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களின் Net-Banking Password-யை மாற்ற வேண்டும். உங்கள் Password-யை 6 மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும் என்று SBI வங்கி பரிந்துரைக்கிறது.
  • நீங்கள் இணைய சேவையை திறக்கும்போது 3 முறை தவறான Password-யை கொடுத்தால் அந்த நாள் முழுவதும் உங்களின் இணைய சேவை முடக்கப்படும். எனவே அந்த மாதிரியான நேரங்களில் Password-யை Reset செய்யலாம்.
  • உங்களின் SBI Login Password-யை யாராவது அறிந்திருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலும் மற்றும் உங்கள் Password ஆனது எளிதில் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் உடனடியாக உங்கள் Password-யை மாற்ற  வேண்டும்.
  • நீங்கள் சமீபத்தில் உங்களின் SBI Net-Banking-யை பொது வைபையில் பயன்படுத்தி இருந்தால், உங்களின் Username மற்றும் Password ஆனது அடையாளம் தெரியாத Network-களால் திருடப்பட்டிருக்கலாம். எனவே அவ்வாறு இருந்தால் உடனடியாக உங்கள் Password-யை மாற்ற வேண்டும்.

Password-யை குறித்த முன்னெச்சரிக்கைகள் 

  • உங்களின் Login Password-யை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். வங்கி ஊழியர்கள் உட்பட யார் கேட்டாலும் உங்களின் Password-யை நீங்கள் பகிரக்கூடாது. அப்படி பகிர்ந்தால் நீங்கள் உங்களின் பணத்தை இழக்க நேரிடும்.
  • உங்களின் Login Password-யை எங்கும் எழுதக்கூடாது. உங்களுக்கு எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும்படி மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அதே நேரத்தில் அந்த Password-யை வேறொருவர் யூகிக்க முடியாதவாறு இருக்க வேண்டும்.
  • உங்களின் இணைய சேவையை இணைய சேவை மையங்களிலோ அல்லது மற்றவர்களின் கணினி, ஸ்மார்ட் போன் போன்றவைகளில் பயன்படுத்தக்கூடாது.
  • நீங்கள் Login Password-யை மாற்றும் போது  ஏற்கனவே பயன்படுத்திய Password-யை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட Password-யை தான் உருவாக்க வேண்டும்.
  • புதிய Password-யை நீங்கள் உருவாக்கும்போது அதில் குறைந்தபட்சம் 8 Character ஆவது இருக்க  வேண்டும். மேலும் அதில் Upper Case, Lower Case, Symbols மற்றும் Number போன்றவை கலந்து இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக UZk!94@Gui

இன்று நீங்கள் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டீர்கள். இதேபோன்று பல பயனுள்ள தகவல்களை பெறுவதற்கு எங்களின் இணையதளத்தை Follow செய்யவும்.

Leave a Comment